ஏப்ரல் 2005
சீசெல்சு, மொரிசியசு தீவுகளில் உலகத் தமிழர் பேரமைப்பு
மருத்துவர் இந்திரகுமார்

சீசெல்சு தீவுகளில் உலகத் தமிழர் பேரமைப்பின் ஒருங்கிணைப்பாளராக "சிவா.' என்று அழைக்கப்படுகின்ற தமிழ் வணிகர் திரு சிவசண்முகம்(பிள்ளை) அத்தீவுகளின் தமிழ் மக்களால் ஒருமனதாகத் தெரிவு செய்யப்பட்டார்.
மொரிசியசு, சீசெல்சு தீவுகளுக்கு உலகத் தமிழர் பேரமைப்பின் துணைத் தலைவர் மருத்துவர் க.இந்திரகுமார் சமீபத்தில் மேற்கொண்ட சுற்றுப் பயணத்தின் போது இத்தேர்வு நடைபெற்றது.
சீசெல்சு தீவுகளில் உள்ள இரு தமிழ் அமைப்புகளான சீசெல்சு தமிழ்க் கலாச்சார வளர்ச்சி மையமும், சீசெல்சு தமிழ் மன்றமும் ஒருங்கிணைந்து மருத்துவர் இந்திரகுமாரை வரவேற்பதற்காக ஒரு கூட்டத்தை ஒழுங்கு செய்திருந்தன.
சீசெல்சு தமிழ்மன்றம் தமிழ் வணிகர் திரு நடேசன் அவர்களால் 1993இல் நிறுவப்பட்டு இயங்கி வருகிறது. "சீசெல்சு மலர்" என்ற அதன் முதலாவது கையெழுத்துப் பிரதி 1993இல் வெளி வந்தது. கடந்த இரு ஆண்டுகளாகத் தமிழ் முரசு என்ற மலரை இது ஆண்டுக்கொரு முறை வெளியிட்டு வருகிறது.
2000ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட சீசெல்சு தமிழ்க் கலாச்சார வளர்ச்சி துரித வளர்ச்சி அடைந்துள்ளது. அங்கே தற்போது ஐம்பதுக்கு மேற்பட்ட மாணவ, மாணவியர் பல்வேறு தமிழ்க் கலை வகுப்புகளில் கற்றுக்கொண்டிருக்கின்றனர். "அலைஓசை" என்ற தமிழ் மலர் ஒன்றை அது ஒரு ஆண்டுக்கு நாலு தடவைகள் வெளியிட்டு வருகிறது. இந்த அமைப்பின் தலைவர்தான் பாண்டிச்சேரியிமூருந்து ஆறு வயதிலேயே சீசெல்சு வந்து குடியேறிய திரு சிவசண்முகம் (பிள்ளை) ஆவார்.
சீசெல்சு தீவான மாகேயில் டாக்டர் இந்திரகுமார் ஆற்றிய உரையின் சுருக்கம் வருமாறு:
"என்னை அறிமுகப்படுத்தி வைத்த சிவசுப்பிர மணியம் ஐயா.அவர்கள் உலகத் தமிழர்களை ஒன்றிணைப்பதற்காக நான் மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்குப் பாராட்டுத் தெரிவித்தார். அதற்கு எனது நன்றி. ஆனால் இந்தப் பணிகளுக்கு எல்லாம் வழிவகுத்துத் தந்த உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவரும், தமிழ் - தமிழர் நலனுக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவருமான எங்கள் தலைவர் பழ.நெடுமாறன் அவர்களுக்குத்தான் உலகத் தமிழினத்தின் நன்றி உரித்தாக வேண்டும்.
உலகத் தமிழரை ஒன்றிணைக்கும் புனிதப் பணியில் நாம் இன்று ஈடுபட்டிருக்கிறோம். அதற்கான முதல் வித்தினை இட்டவர் தமிழீழத்தைச் சேர்ந்த அருட்திரு தனிநாயகம் அடிகளார்தான். அவரது முயற்சியால் உலகத் தமிழறிஞர்கள் ஒன்றிணைந்து "உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு"களைப் பல நாடுகளில் பலமுறை நடத்தி வந்தனர். இதனால் தமிழாராய்ச்சி உலகளாவிய ரீதியில் ஒன்றிணைக்கப் பட்டது.
அதைப்போல தமிழீழத்தைச் சேர்ந்த முனைவர் கா.பொ.இரத்தினம் (1963), மலேசியாவைச் சேர்ந்த தமிழ்த் தலைவர் டேவிட், அமெரிக்காவைச் சேர்ந்த முனைவர் தணிசேரன் ஆகியோர் ஆரம்பித்து வைத்த உலகத் தமிழ் மன்றங்களும் பெரிதாக முன்னெடுத்துச் செல்லப்படவில்லை.
1980ஆம் ஆண்டில் எம்.ா.ஆர் முதலமைச்சராக இருந்த காலத்தில் தமிழ்நாடு சட்டசபையில் பழ.நெடுமாறன் ஒரு வேண்டுகோள் விடுத்தார்.
உலகெங்கும் உள்ள தமிழர் அமைப்புக்களை ஒருங்கிணைத்து, உலகத் தமிழர் கூட்டமைப்பு ஒன்றினைத் தமிழ்நாட்டு அரசு ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை வமூயுறுத்திப் பேசினார். எம்.ா.ஆர். அதனை ஏற்றுக்கொண்டார். அதற்கான உத்தியோகபூர்வமான அறிவிப்பை அடுத்த வருடம் மதுரையில் நடைபெற்ற ஐந்தாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் பிரகடனம் செய்தார். இந்த அமைப்பின் தலைமையகத்திற்கு மதுரையில் இடம் ஒதுக்கப்பட்டது. ஆரம்ப நிதியாக பத்துக்கோடி ரூபாய்களை அரசு ஒதுக்கியது.
உலகத் தமிழர் பெருமகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். ஆனால் எம்.ா.ஆரின் மறைவிற்குப் பிறகு அந்த முயற்சி கிடப்பில் போடப்பட்டது. ஆனால் உலகத் தமிழர் பேரமைப்பு ஒன்றினை ஏற்படுத்த வேண்டும் என்ற ஆர்வம் நெடுமாறனின் மனத்தில் அணையவே இல்லை. அடுத்த 20 ஆண்டு காலமாக அவர் உலக நாடுகளில் மேற்கொண்ட சுற்றுப் பயணங்களின் போது, ஆங்காங்கே உள்ள தமிழர் அமைப்புகளின் ஆசையும் அதுவேதான் என்று உணர்ந்து கொண்டார். தெரிந்தோ.தெரியாமலோ. விரும்பியோ. விரும்பாமலோ. ஈழத் தமிழர்கள் தமது மண்ணில் நடைபெற்று வந்த கொடுமைகளின் விளைவாக மேற்குலகு எங்கும் அகதிகளாகப் பெருவாரியாகக் குடியேறி, வேரூன்றத் தொடங்கிய காலப்பகுதியும் அதுதான்.
உலகத் தமிழரின் ஏகோபித்த ஆதரவுக்கு செயல்வடிவம் கொடுக்க வேண்டும் என்ற உறுதி நெடுமாறன் மனதில் அதிகரித்தது. உலகில் 75 நாடுகளுக்கு மேல் தமிழர் பரந்து வாழத் தொடங்கி விட்டனர். உலகில் தமிழர் இல்லாத நாடில்லை, ஆனால் தமிழனுக்கென்று ஒரு நாடும் இல்லை, நாதியும் இல்லை.
அமெரிக்க, பிரித்தானிய அரசுகளின் அதிகார மையத்தில் யூதர்களின் பலம் செறிந்துள்ளதால் உலகில் யூதர் நலம் பேணப்படுகிறது. 27 நாடுகளில் வாழும் அரேபிய மக்களின் நலனைப் பேணுவதற்காக அரேபிய லீக் உள்ளது. செஞ்சீன வல்லரசின் பலத்திற்கு உலகெங்கும் உள்ள மரியாதை காரணமாக தென்கிழக்கு ஆசிய நாடுகளில் செறிந்தும், உலகெங்கும் பரவலாகவும் வாழும் சீன மக்களை யாரும் துன்புறுத்தத் துணிவதில்லை. அதுபோலவே, ஆப்ரிக்கா.மக்களுக்குக் குரல் கொடுப்பதற்கு ஆபிரிக்க அமைப்பு உள்ளது.
எனவே உலகளாவிய தமிழர் பேரமைப்பு, அவர்களது மொழியையும், கலாச்சாரத்தையும் மட்டும் பேணுவதற்காக அமைந்தால் போதாது. அது அவர்களின் சமூகவியல் ரீதியான உரிமைகளுக்காகவும் போராட வேண்டும், அதோடு அவர்களது மொழி, பண்பாடு, கலை, இலக்கியம், வரலாறு என்பனவற்றின் அடிப்படையில் அவர்களுக்கு இடையே உள்ள உறவைப் பலப்படுத்த வேண்டும் என்றும் நெடுமாறன் விரும்பினார்.
1999ஆம் ஆண்டு ஆகா. மாதம், உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் வெள்ளிவிழா.மாநாடு சென்னையில் நடைபெற்றது. அந்த அமைப்பின் தலைவரான முனைவர் இர.ந.வீரப்பனார் மாநாட்டைத் தொடக்கி வைக்கும்படி நெடுமாறனைக் கேட்டுக் கொண்டார். தொடக்கவுரை ஆற்றிய நெடுமாறன் அந்த மாநாட்டின் சிந்தனைக்காக ஐந்து அம்சத் திட்டமொன்றை முன் வைத்தார்.
1. உலகத் தமிழர்களுக்கான ஒரு குடை அமைப்பு
2. உலகத் தமிழர் கொடி
3. உலகத் தமிழர் தேசியப் பண்
4. உலகத் தமிழர்களுக்குத் தேசிய உடை
5. உலகத் தமிழர் வங்கி
இந்த மாபெரும் பணியை உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் முன்னெடுத்துச் செல்லும் என்று கருதியிருந்தார். ஆனால் அந்த மாநாட்டில் நெடுமாறன் வெளியிட்ட ஐந்து அம்சத் திட்டத்தை மாநாடு வரவேற்கிறது எனவும், அதை நிறைவேற்றித் தரும் பொறுப்பை நெடுமாறன் ஏற்கவேண்டும் என்றும் இர.ந.வீரப்பனாரே ஒரு தீர்மானத்தை முன் மொழிந்து அதனை ஏகமனதாக நிறைவேற்றியும் வைத்தார். தீர்மானம் நிறைவேறிய சில நாட்களினுள் அவர் மாரடைப்பால் இறந்தும் விட்டார்.
1980இல் நெடுமாறன் உலகத் தமிழர் பேரமைப்பு ஒன்றினை ஆரம்பிக்கும்படி சட்டசபையில் எம்.ா.ஆரைக் கேட்டார். எம்.ா.ஆர் அரசு அதனை அங்கீகரித்து ஆரம்பித்து வைத்தது. ஆனால் எம்.ா.ஆரின் மறைவோடு அந்த முயற்சி கிடப்பில் போடப்பட்டது. 1999ல் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் வெள்ளிவிழா.மாநாட்டில் அதே கோரிக்கையை குறிப்பிட்ட சில குறிக்கோள்களுடன் முன்வைத்தார். அதை ஏற்றுக்கொண்ட மாநாடு அதை நிறைவேற்றித் தரும் கடமையை நெடுமாறனுக்கே அளித்தது. அதையடுத்து அதன் தலைவரும் மறைந்துவிட்டார். இத்தகைய ஒரு பணியை நிறைவேற்ற நெடுமாறன் ஐயாவினால் தான் முடியும் என்பது தமிழன்னையின் முடிவு போலும்.
1999 முதல் 2003 வரை இந்தப் பணியைச் சிரமேற்கொண்டு நெடுமாறன் அயராது உழைத்தார். அரசியற்கட்சி வரம்புகளைக் கடந்து, தமிழார்வம் கொண்ட தமிழறிஞர்களை அடிக்கடி கூட்டி ஆராய்ந்தார் - திட்டமிட்டார். உலகளாவிய தமிழர் அமைப்புகளுக்கு கடிதம் எழுதி, அவர்களது கருத்துகளைக் கேட்டு அறிந்தார். அதற்கு ஏற்பச் செயற்பட்டார். 2003ஆம் ஆண்டு சூலை 20-21 ஆகிய நாட்களில் உலகத் தமிழர் பேரமைப்பின் தொடக்கவிழா.மாநாடு சென்னையில் மிகக் கோலாகலமாகவும், பரபரப்பாகவும் நடைபெற்றது.
பல்லாயிரம் ஆண்டுகாலமாகத் தமிழை அழிப்பதற்கு இந்தியாவில் உள்ள வட மொழிக்காரர்கள் முயன்று வந்ததையும், அதை முறியடிப்பதற்குத் தூய தமிழ்ச் சக்திகள் போரிட்டு வந்ததையும் இந்திய வரலாற்றில் மறக்கவோ. மறுக்கவோ.முடியாது. கடந்த நூற்றாண்டில் தமிழ் நாட்டில் திராவிட இயக்கங்களின் தோற்றத் திற்கும் அளப்பரிய வளர்ச்சிக்கும் இவையே வழிவகுத்தன என்பதும் வரலாறு. இன்றோ.வடமொழிக்காரர்களை (ஆரியர்களை) விட, அவர்கள் போடுகின்ற எலும்புத் துண்டுகளுக்காக அவர்களுடன் கூட ஓடுகின்ற தமிழ் பேசும் குடிமக்களின் அட்டா.துட்டித் தனங்கள் மிக அதிகம். நெடுமாறன் நிறுவ நினைத்த இந்த அமைப்பினால் தமிழர் களுக்கு என்ன பயன் என்று தமிழர்கள் ஆராய்ந்ததை விட நுணுக்கமாக அந்த எடுபிடிகள் ஆராய்ந்தார்கள். இந்த அமைப்பு எதிர்காலத்தில் எடுக்கக்கூடிய விசுவரூப வாய்ப்புக்களை அனுமானித்து, சரியாகக் கணித்து, பேரச்சம் அடைந்தனர். வட மொழிக்காரர்களுக்குக் கிலியை ஏற்றி விட்டு, இது விடுதலைப்புலிகள் ஆதரவு மாநாடு என்ற போலிக் குற்றச்சாட்டை அடிப்படையாக வைத்து, போலிா.தடை என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தி, மாநாட்டை நடத்த முடியாமல் முடக்க முயன்றனர்.
மகாநாட்டிற்கு முதல் நாள் நெடுமாறன் நீதிமன்றம் சென்றார். உண்மையை விளக்கினார். அவரது சத்தியபூர்வமான விளக்கத்தை ஏற்றுக் கொண்டு நீதிபதிகள் போலிா.தடையை உடைத்தெறிந்து மகாநாடு நடக்க அனுமதி தந்தனர். மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் பணத்தை வாரி இறைத்து ஏற்படுத்தக் கூடிய விளம்பரத்தை விடப் பன்மடங்கு அதிகமான விளம்பரத்தை மாநாட்டுத் தடையாளர்களின் போலிா.முயற்சிகள் மாநாட்டிற்கு ஈட்டித் தந்தன. இதன் விளைவாக மகாநாடு மேலும் பெருஞ் சிறப்பாக நடைபெற்றது - மிகப் பரபரப்புடன் நடந்தேறியது.
அந்தந்த மொழிகளைப் பேசுகிற வர்கள்தான் தத்தமது மொழிகளைப் பேணி வளர்க்க வேண்டும். அப்படித்தான் செய்தும் வருகிறார்கள். ஆனால் தமிழர்கள் தமது மொழியை வளர்ப்பதற்கு ஒன்று கூடும் போதெல்லாம், இந்த வட மொழிக்காரர் களுக்கு வயிற்றில் புகைச்சல் ஏற்படுவது ஏன்? அதைவிட அதிகமான எரிச்சலும் ஆத்திரமும் அவர்களது தமிழ் பேசும் கருங்காலிகளுக்கு ஏற்படுவது ஏன்? மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணம் வீசட்டும் என்று தானே தமிழர்கள் நினைக்கிறார்கள், செயற்படுகிறார்கள்?
எனது குழந்தையை நான்தானே பாலூட்டிச் சீராட்டி வளர்கவேண்டும்? அதை அடுத்த வீட்டுக்காரன் செய்வான் என்று என்னால் ஒதுங்கவும் முடியாது. அவனது குழந்தையைப் பாலூட்டிச் சீராட்டி வளர்க்க என்னாலும் முடியாது. மாற்றான் தோட்டத்து மல்லிகை வாசனை யிழந்து சோபையிழந்து போகட்டும் என்று நினைப்பவன் அல்ல தமிழன். ஆயிரம் மலர்கள் மலரட்டும், அவற்றில் பல்வேறு வர்ணங்கள் பொலிந்து, பல்வேறு நறுமணங்கள் கமழட்டும் என்று வாழ்த்திவிட்டு, எங்கள் தமிழை வளர்க்க உலகத் தமிழருடன் ஒன்றுபடுமாறு சீசெல்சு தீவுக் கூட்டத்தின் தமிழர்களை அன்புடன் வேண்டிக் கொள்கிறேன்.
உலகத் தமிழர்களே ஒன்றுபடுங்கள் என்ற இலட்சியப்பூர்வமான அறை கூவலுடன் கருத்தரித்து, அனைத்துலக ரீதியிலான கலந்துரையாடல், கருத்துக் கணிப்பு முலம் ஊட்டி வளர்க்கப்பட்ட உலகத்தமிழர் பேரமைப்பின் தொடக்க விழாவும் அத்தகைய இலட்சியங்களின் பிரதிபலிப்பாக அமைந்ததும் நியாயமானதே. உலகத் தமிழர் பேரமைப்பின் இலட்சியங் களால் கவரப்பட்டு, அந்த அமைப்பின் செயற்பாடுகளில் பங்கேற்கவேண்டும் என்று விழைந்த எந்த ஒரு தமிழ்க் குடிமகனும் ஏமாற்றம் அடையக்கூடாது என்று விழா.ஏற்பாட்டுக் குழுக்கள் மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டதன் பலனை மாநாட்டில் காணக்கூடியதாக இருந்தது.
மாநாட்டு மண்டபத்தினுள் 1500 தமிழ் அறிஞர்களும், தொண்டர்களும் மண்டபத்துக்கு வெளியே உள்ள மைதானத்தில் ஒலிபெருக்கி முலம் மாநாட்டு நிகழ்வுகளைக் கேட்டு மனநிறைவு எய்திய மேலும் பல ஆயிரம் தமிழ் ஆர்வலர்களுமாக மாநாடு இரு தினங்களாகக் காலை முதல் இரவு வரை நடைபெற்றது. சங்க காலத்துப் பெருமைகளை, புகழை நவீன காலத்தில் மீளமைத்துக் காட்டியது.
மண்டபத்தினுள்ளே நிறைந்திருந்தவர்கள் கட்சி வரம்புகளுக்கு அப்பாற்பட்டு வந்திருந்தனர். அப்போது ஆண்டு கொண்டிருந்த அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரா.மற்றும் அனைத்துக் கட்சிகளின் ஆதரவாளர்களும் மேடையிலும் மண்டபத் தினுள்ளும் நிறைந்திருந்தனர். தமிழை உண்மையாக நேசித்த அத்தனை தமிழறிஞர்களும், தமது கட்சி வேறுபாடு களை மறந்து, தமிழன்னையின் தவப் புதல்வன் பழ. நெடுமாறனின் அறைகூவலுக்குத் தோள் கொடுக்க அங்கே வந்திருந்தனர்.
மாநாட்டில் ஆரம்ப உரை நிகழ்த் தியவர்களுள் ஒருவர் எனது இனிய நண்பர். அன்றைய ரணில் விக்கிரமசிங்காவின் அரசில் அமைச்சர் பதவி வகித்தவரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான திரு சந்திரசேகரன் அவர்கள் விடுதலைப்புலிகளுக்கும் ரணில் அரசுக்கு மிடையே சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம் அது. இலங்கையில் ஈழத் தமிழர்களதும் மலையகத் தமிழர்களதும் ஐனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டதை வன்மை யாகக் கண்டித்தார். விடுதலைப்புலிகளின் போராட்டத்தை மனம்திறந்து பாராட்டி னார். இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தரத் தயங்கும் தமிழக அரசியல்வாதிகளைத் தட்டிக் கேட்டார். சந்திரனின் பேச்சிற்கு மண்டபத்திலிருந்து அலை அலையாக எழுந்த கரவொலியுடன் மாநாடு களை கட்டியது. அந்தக் களை, மாநாடு அடுத்த நாள் முடியும்வரை இறங்கவில்லை.
அவரைத் தொடர்ந்து பேசிய தமிழீழப் பாராளுமன்ற உறுப்பினர் திரு.விநாயகமுர்த்தியும் மலையகத் தொழிற் சங்கப் பிரதிநிதி திரு.செல்லச்சாமியும் உணர்ச்சி கொந்தளிக்கப் பேசி மாநாட்டின் களையை மேலும் அதிகரித்தனர்.
உலகத் தமிழர் பேரமைப்பின் ஐந்து பிரதான நோக்கங்களை நெடுமாறன் திட்டவட்டமாக வரையறுத்துக் கூறினார். இவை ஐந்து மீட்புப் பணிகள் ஆகும்.
1.மொழி மீட்பு
2. பண்பாடு மீட்பு
3. வரலாறு மீட்பு
4. இன மீட்பு
5. மண் மீட்பு
இந்த ஐந்து மீட்புகளும் திட்டமிட்டு நடைபெறாவிட்டால் உலகில் தமிழும் இருக்காது, தமிழனும் இருக்கமாட்டான் என்ற உண்மை மீண்டும் மீண்டும் பலமாக வலியுறுத்தப்பட்டது.
மாநாட்டில் 5 முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன. உலகத்தமிழர் பண், தமிழர் தேசிய உடை, உலகத்தமிழர் கொடி ஆகியவை ஏற்கப்பட்டன. உலகத்தமிழர் வங்கி அமைக்கும் திட்டம் வகுக்கப்பட்டது. தமிழர் வரலாற்றில் இதுவரை மேற்கொள்ளப் படாதிருந்த முடிவுகள் ஏற்கப்பட்டபோது மாநாட்டில் கூடியிருந்தோர் மட்டுமல்ல உலக முழுவதிலும் உள்ள தமிழர்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தனர்.
உலகின் பல பகுதிகளில் தமிழர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். உலகின் பலப் பகுதிகளுக்கு பல்வேறு நோக்கங்களுக்காகச் சென்றிருக்கிறார்கள் அல்லது அழைத்துச் செல்லப்பட்டிருக் கிறார்கள். உலகின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்து வருகிறார்கள். இவற்றை எல்லாம் உள்ளடக்கி, ஆராய்ந்து, உலகத் தமிழர் வரலாறு எழுதப்படவேண்டும்.
இன்று உங்களைஅண்மித்த தென்னாப் பிரிக்காவில் தமிழர்கள் வாழ்கிறார்கள். கடந்த நூற்றாண்டில் அவர்கள் அனுபவித்த சோதனைகள், வேதனைகள் உலகத் தமிழர் வரலாற்றில் எழுதப்படவேண்டும். சீசெல்சு தீவுகளில் பல இனக்குடி மக்களோடு இணைந்து, அதே நேரத்தில் உங்கள் மொழி, கலை கலாச்சாரத்தைப் பேணிக்கொண்டு நீங்கள் வாழ்கிறீர்கள். நான் ஏற்கெனவே சென்று வந்த மொரீசியசு தீவுகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள். அந்த நாட்டை ஒரு காலத்தில் ஆண்ட பிரெஞ்சுக்காரரின் பெயர்ப் பதிவு அதிகாரிகள் தமிழ்ப் பெற்றோர் தமது குழந்தைகளுக்குச் சூட்டிய தூய தமிழ்ப் பெயர்களைச் சிதைத்து விட்டார்கள். மோரிசியசுத் தமிழர்கள் தமிழை மறந்து வீட்டிலும் வெளியிலும் கிரியோல் மொழி பேசுகிறார்கள். அதிகாரப்பூர்வமான படிவங்களில் தங்கள் சமயத்தைத் தமிழ் என்றே பதிந்து வருகிறார்கள். உதட்டில் பேச மறந்த தமிழை உள்ளத்தில் தெய்வமாக்கி விட்டார்கள். அந்தச் சின்னஞ்சிறிய தீவில் 125 தமிழ்க் கோவில்கள்! தமிழ்க் கடவுள் குமரனுக்குக் கோவில் நிறுவி வழிபட்டு, காவடி எடுத்து, ஆடிப்பாடி மகிழ்கிறார்கள். உலகிலே தமிழ்மொழி வழக்கொழிந்து போன முதலாவது நாடு மொரீசியசு. இதன் வரலாற்றிமூருந்து தமிழர்கள் படிக்க வேண்டிய பாடங்கள் நிறைய உள்ளன. சீசெல்சு, மொரீசியசு பிரதேசத்தில் உள்ளதுதான் றீயூனியன் நாடு. பிரெஞ்சு அரசின் குடியேற்ற நாடாகவே அது இன்றும் உள்ளது. றீயூனியனின் மக்கள்தொகையில் எழுபது விழுக்காடு தமிழர்கள் என்று உங்களுக்குத் தெரியுமா. இந்தப் புள்ளிவிவரத்தைச் சுட்டிக் காட்டும்போது என் மனத்தில் சின்னச் சின்ன ஆசைகள் எழுகின்றன. சிறகடித்துப் பறக்கின்றன.
உலகத் தமிழர் வரலாறு எழுதப்படுவதற்கு உலகத் தமிழர் பேரமைப்பு ஒரு உந்துசக்தியாக விளங்குவதோடு, தன்னாலான உதவிகள் அனைத்தையும் செய்யும்.
இனமீட்பு
இந்தியாவிமூருந்து மொரீசியசு தீவுகளுக்குத் தொழில் புரிவதற்காக அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்கள், தமிழை மறந்து, பிரெஞ்சு-கிரியோல் மொழிகளைப் பேசி, தமது இன அடையாளங்களை இழந்து வருவதைக் கண்டோம். பிரிட்டிா.கினியாவில் வாழும் தமிழர்களும் தமது இன அடையாளங்களை முற்றாக இழந்துவிட்டதாகத் தெரிகிறது. இலங்கையில் புத்தளம் பிரதேசத்தில் வாழ்ந்து வந்த தமிழர்கள் காலகாலமாகச் சிங்களம் மட்டுமே பேச வேண்டி வந்த நிர்பந்தத்தால் தமது இன அடை யாளங்களை முற்றாக இழந்துவிட்டனர். அதுபோலவே இந்தியாவில் கருநாடகத்தில் வாழ்ந்து வந்த தமிழர் பலரும், கேரளத்தில் வாழ்ந்து வந்த தமிழர் பலரும், ஆந்திராவில் வாழ்ந்து வந்த தமிழர் பலரும் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அந்தந்த நாட்டு மொழிகளையே பேசிப்பேசி, தமிழை மறந்து தமது இன அடையாளங்களை இழந்து நிற்கின்றனர்.
இந்த நிலை மாறவேண்டும். தமிழினத்திமூருந்து திரிபுற்றுச் சென்றோரை மீட்டெடுக்க முயற்சிகள் எடுக்கப் படவேண்டும். இந்தப் பிரச்சினையைப் பொறுத்தமட்டில் யூத இனத்திடமிருந்து தமிழினம் ஒரு பெரிய பாடத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும். உலகெங்கும் சிதறி வாழ்ந்த யூதர்கள், அங்கங்கெல்லாம் தமது கல்வி நிலையங்களையும் கலாச்சார அமைப்புகளையும் நிறுவியதோடு அவர்களது பழக்க வழக்கங்களையும் பாதுகாத்ததால் தமது பண்பாட்டையும் தனித்துவத்தையும் இழக்காமல் இருக்க முடிந்தது. 2000 ஆண்டுகளுக்கு முன்னர் தாம் இழந்த இா.ரல் என்ற தாயகத்தையும் மீண்டும் நிறுவவும் முடிந்தது.
மண் மீட்பு
மொழி மீட்பு, பண்பாடு மீட்பு, வரலாறு மீட்பு, இன மீட்பு ஆகிய நான்கு மீட்புகளும் செவ்வனே நடைபெற்றால், அவை மண் மீட்பிற்கு எளிதாக வழிகோலும். அத்தகைய ஒரு இனம் வீறுகொண்ட ஒரு இனமாகத் தனது மண்ணை மீட்க முன்னேறும். தமிழர்கள் தமக்குச் சொந்தமான மண்ணை ஒரு போதும் இழக்கக் கூடாது. தாம் இழந்த மண்ணைப் போராடியாவது மீட்க வேண்டும். ஏனெனில் தமது மண்ணை இழந்த இனம் காலப்போக்கில் நாடோடிகளாக மாறிவிடும் அல்லது வேற்று இனங்களுடன் கலந்து முற்றாக மறைந்து விடும்.
இந்த ஐந்து குறிக்கோள்களையும் தலையாய இலட்சியங்களாக உலகத் தமிழர் பேரமைப்பு கொண்டுள்ளது. இந்த இலட்சியங்கள் எம் வாழ்நாளில் நிறைவேறாவிட்டாலும், எமது அடுத்த தலைமுறை - வீரத் தமிழ் இளைஞர்களும், நங்கையர்களும் இவற்றை முன்னெடுத்துச் செல்வார்கள். இவற்றை அடைந்தே தீருவார்கள்.
இதை அடிப்படையாக வைத்துத்தான் உலகத் தமிழர் பேரமைப்பின் தொடக்கவிழா.மாநாடு நடைபெற்றது. அதில் இடம்பெற்ற பேச்சுகள், கருத்தரங்குகள் அமைந்தன. முதற் சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கங்களுக்குப் பிற்பாடு நடைபெற்ற நான்காவது சங்கம் இந்தத் தொடக்கவிழா.மாநாடுதான் என்று தமிழ் ஆர்வலர்கள் பெரு மகிழ்ச்சி அடைந்தனர். சூறாவளி வேகத்தில் மாநாட்டின் முடிவுகள் முன்னெடுத்துச் செல்லப்படும் என்ற நியாயமான எதிர்பார்ப்புகளும் எழுந்தன.
அது போலவே - மாநாட்டின் பெருவெற்றி தமிழெதிரிகள் மத்தியில் பெரும் பீதியையும், பதட்டத்தையும் ஏற்படுத்தத் தவறவில்லை.
தமிழ் எதிரிகளின் அசகாயசூரத்தனத்தின் விளைவாக மாநாடு முடி வடைந்த ஒரு வாரத்தினுள் நெடுமாறன் ஐயா.கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். என்றோ. எங்கேயோ. எப்போதோ.அவர் விடுதலைப் புமூகளை ஆதரித்துப்பேசிய ஒரு ஒமூப்பதிவு நாடாவை எங்கோ.ஒரு களஞ்சியத்தி மூருந்து தூசிதட்டி எடுத்து வந்து, "பொடா.' சட்டததின் கீழ் ஐயாவை சிறையிமூட்டனர். சுபவீ உட்பட ஐயாவைத் தலைவராகக் கொண்ட தமிழர் தேசிய இயக்கத்தின் முக்கிய தலைவர்கள் எல்லோரையும் முடக்கினர்.
72 வயதை எட்டிவிட்ட இருதய நோயாளி நெடுமாறன் ஐயாவை 525 நாட்கள் சிறையில் அடைத்து வைத்ததோடல்லாமல், அங்கிருந்து வசதி குறைவான காவல்துறை வாகனங்களில், கரடு முரடான சாலைகளில் 50,000 கிலோ.மீட்டர் தூரத்துக்கு மேல் ஐயாவை அழைத்துச் சென்று பல்வேறு நீதிமன்றங்களில் குற்றவாளிக் கூண்டுகளில் நிறுத்தினார்கள் தமிழ் விரோதிகள். இப்போது ஐயா.சிறையிமூருந்து விடுதலை செய்யப்பட்டுவிட்ட போதிலும் அவரது பேச்சுச் சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது. அவரது கடவுச்சீட்டு முடக்கப்பட்டுள்ளது.
உலகத் தமிழர் பேரமைப்பின் தொடக்கவிழா.மாநாடு முடிவடைந்தவுடன் தமிழ் மக்கள் வாழும் உலகப் பிரதேசங் களுக்கு ஐயா.ஒரு தடவை சுற்றுப்பயணம் சென்று அங்கெல்லாம் உள்ள தமிழர் அமைப்புகளை ஒருங்கிணைக்கும் ஆரம்ப முயற்சிகளை செய்து முடிக்க அவகாசம் இருந்திருந்தால் நாம் இப்போது மிகவும் சுறுசுறுப்பாக இயங்கியிருக்க முடியும். அதற்கு வாய்ப்பு கிடைக்காததால் உலகில் அங்கும் இங்குமாகப் பரவியிருக்கும் என்போன்ற பேரமைப்பின் செயற்குழுவினர் எம்மாலான அமைப்பு முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறோம்.
ஆா.ரேமூயா.- நியூசிலாந்து நாடுகளில் உள்ள தமிழர் அமைப்புகளை ஒன்றிணைக்கும் ஒரு கூட்டமைப்பு ஏற்கெனவே இருந்து வந்திருக்கிறது. இந்த அமைப்புடன் எங்கள் செயலாளர் நாயகம் மருத்துவர் பொன் சத்தியநாதன் பேச்சுவார்த்தைகள் நடத்தியதன் விளைவாக அந்தக் கூட்டமைப்பு எங்கள் பேரமைப்புடன் இணைவதற்கு ஐயாவின் வருகையைப் பார்த்து இருக்கிறது. மலேசிய அமைப்பு களுடனும் மருத்துவர் சத்தியநாதன் பேச்சுவார்த்தைகள் நடத்தியதன் விளைவாக அவர்களும் ஐயாவின் வரவை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். பேரமைப்பின் தொடக்க விழா.மாநாட்டை அடுத்து, ஐயா.கைது செய்யப்பட்ட அன்று, மலேசிய அமைப்புக்களைச் சந்தித்து அவர்களை ஒன்றிணைப்பதற்காகப் புறப்பட்டுக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பாவைப் பொறுத்தமட்டில், ஐக்கிய இராச்சியத்தில் வசிக்கின்ற நான் பல முயற்சிகளைக் கடந்த இரு ஆண்டுகாலமாக எடுத்திருக்கிறேன். ஐக்கிய இராச்சியம், பிரான்சு, ஜேர்மனி, சுவிட்சர்லாந்து, நோர்வே, டென்மார்க், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் உள்ள பல தமிழர் அமைப்புக்களையும், ஆர்வலர்களையும் சல்லடை போட்டுத் தேடி, உலகத் தமிழர் பேரமைப்பின் பணிகளை இந்நாடுகளில் ஒருங்கிணைத்து, ஒரு ஐரோப்பிய தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பைக் கட்டியெழுப்ப உழைக்கக்கூடிய சிறந்த அமைப்பாளர்களை இந்த நாடுகள் ஒவ்வொன்றிற்கும் தேர்ந்தெடுத்தேன். நெடுமாறன் ஐயா.சிறை மீண்டதும் அவர் தலைமையில் இயங்கும் செயற்குழுவிற்கு இந்த அமைப்பாளர் பட்டியலைக் கொடுத்து, அது அவர்களால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளவும் பட்டுள்ளது.
அதையே நான் இங்கே சீசெல்சு தீவுகளிமூருந்து இந்தக் கூட்டத்திற்கு வந்துள்ள உங்களுக்கும் சொல்ல விரும்புகிறேன். உங்களுக்கு அண்மையில் உள்ள தென்னாபிரிக்காவில் பல தமிழர் அமைப்புகள் உள்ளன. அவற்றின் பிரதிநிதி கோவிந்தசாமி ஐயா.உலகத் தமிழர் பேரமைப்பின் ஒரு துணைத்தலைவராகப் பணியாற்றுகிறார். தென்னாபிரிக்க கரைகளை ஒட்டியுள்ள மூன்று தீவுக் கூட்ட நாடுகள் மீது எங்கள் கவனம் தற்போது திரும்பியுள்ளது. மோரீசியசு தீவுகளுக்குச் சென்று வந்துள்ளேன். சீசெல்சுப் பயணத்தை முடித்துக்கொண்டு இலண்டன் செல்லும் வழியில் மீண்டும் மொரீசியசு செல்லவிருக்கிறேன்.
மொரீசியசில் பேச்சு மொழியாகக் தமிழை நான் காணவில்லை. எழுத்து மொழியாகத் தமிழை நான் காணவில்லை. ஆனால் அங்கே உள்ள பெருவாரியான தமிழ் ஆலயங்களில் தமிழை வழிபாட்டு மொழியாக நான் கண்டேன். அந்த வழிபாட்டிலே கொழுந்துவிட்டு எரிந்த தமிழ் ஆர்வத்தைக் கண்டேன். பேச்சுத் தமிழும் எழுத்துத் தமிழும் உலகில் முதன் முதமூல் வழக்கொழிந்து போன அந்த நாட்டில் முத்தமிழை மீண்டும் கொலுவேற்ற வேண்டும் என்ற ஆவல் எங்கள் உள்ளங்களில் விழுமி நிற்கிறது.
மொரீசியசு தீவுகளில் நான் முக்கியமாகச் சந்திக்கச் சென்றது குமரன் செட்டி என்ற பிரமுகரை. அவரோடு நான் தொலை பேசியில் அடிக்கடி பேசியிருந்தேன். ஆனால் அவரை நேரில் பார்த்தது கிடையாது. குமரன் செட்டியின் தோற்றம் எப்படி இருக்கும் என்று என் மனதில் உருவகப்படுத்தியிருந்ததற்கு நேர் விரோதமாக அவர் இருந்தது எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி. நவநாகரிகமாக உடுத்தியிருந்த ஒரு துடிப்பு மிக்க இளம் தொழிலதிபரை நான் கண்டேன். தமிழுணர்வோடு தனது மகனுக்குப் பிரபாகரன் என்றும் தனது மகளுக்கு அமைதி என்றும் பெயர் சூட்டியிருந்த ஒரு தமிழ் ஆர்வலரைக் கண்டேன். தமிழை வளர்க்க அவர் விரும்புகிறார். எதிர்காலத்தில் அந்த நாட்டின் பொது வாழ்க்கையில் தமிழர்கள் உயர் பதவிகள் வகிக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். இதற்காகத் தமிழ் இளைஞர்களுக்கு தரமான உயர்கல்வி வழங்குவதற்கு ஒரு கல்லூரியை நிறுவ விரும்புகிறார். சீசெல்சு, றீயூனியன் நாடுகளில் உள்ள தமிழர் அமைப்புகளுடனும் ஏனைய உலகத் தமிழர் அமைப்புகளுடனும் இணைந்து செயலாற்ற விரும்புகிறார்.
மொரீசியசு நாட்டில் தமிழ்ச் சங்கங்கள் என்று நாம் கருதவேண்டியது அங்குள்ள 125 தமிழ் ஆலயங்கள்தான். தமிழின் பெயரால் அங்குள்ள மக்கள் ஒன்று கூடுவது இந்த ஆலயங்களில்தான். பல ஆலயங்கள் ஒருங்கிணைந்து கூட்டமைப்பு களையும் உருவாக்கியுள்ளன. குமரன் செட்டி அவர்களும் அவரது குடும்பத்தினரும் நிர்வகிக்கும் ஆலயங்களும் ஆலயக் கூட்டமைப்புகளும் அங்கே உள்ளன. உலகத் தமிழர் பேரமைப்போடு இணைந்து செயலாற்ற அங்குள்ள 125 தமிழ் அமைப்புகளும், அதாவது ஆலயங்களும் அங்கே தயாராக உள்ளனர்.
றீயூனியன் தீவுகளில் மிகச் சுறுசுறுப்பான ஒரு தமிழ்ச் சங்கம் உள்ளது. தமிழ்ச் சங்கத்தின் தலைவராக இன்று விளங்குபவர் கலைச்செல்வன் என்ற புனைபெயரை உடைய ஒரு துடிப்புள்ள மருத்துவர் என்று அறிகிறேன். அவரோடு, தொடர்ந்து தொடர்பு கொள்வோம். மொரீசியசு, சீசெல்சு, றீயூனியன் தமிழர் அமைப்புக்களை ஒரு கூட்டமைப்பாக முதமூல் இணைப்போம். இந்தக் கூட்டமைப்பைத் தென்னாப்பிரிக்கக் கூட்டமைப்போடு இணைத்து உலகத் தமிழர் பேரமைப்பு என்ற உலகளாவிய அமைப்போடு அன்பால் பிணைப்போம்.
உலகளாவிய ரீதியில் தமிழர்கள். தமிழர் அமைப்புகள் இணையும்போது எமக்கு ஒரு புதிய பலம் ஒரு புதிய சக்தி உருவாகிறது. "அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு" என்பது பழமொழி. உலகளாவிய ரீதியில் ஆயிரக்கணக்கான தமிழர் அமைப்புகள் இணையும்போது ஏற்படுகின்ற மிடுக்கு எவ்வளவு பலம் வாய்ந்தது தெரியுமா. ஒரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம். தென்னாப்பிரிக்காவில் சில தமிழர்கள் தாக்கப்படுகிறார்கள் அல்லது கொல்லப்படுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். இதை எதிர்த்து நூறு உறுப்பினர்களைக் கொண்ட ஒரு சீசெல்சு சங்கம் ஒரு கண்டன அறிக்கை விடுத்தால் அதை யார் கணக்கெடுப்பார்கள், அதை எத்தனை பத்திரிகைகள் வெளியிடும்? ஆனால் - இதே அதர்மத்தை எதிர்த்து உலகளாவிய பல ஆயிரம் தமிழர் அமைப்புகளின் குடை அமைப்பான உலகத் தமிழர் பேரமைப்பு ஒரு கண்டன அறிக்கை வெளியிட்டால் அது தென்னாப்பிரிக்க அரசையே ஒரு கலக்குக் கலக்கும், அது மட்டுமல்ல ஐ.நா.வின் கவனத்தையே ஈர்க்கும்.
சீசெல்சு நாட்டுத் தமிழ் உடன் பிறப்புகளே, உலகளாவிய ரீதியில் நாடற்ற தமிழனை, நாதியற்ற தமிழனை, எங்கள் கூட்டுப்பலத்தால் சக்திவாய்ந்த தமிழனாக மாற்றக்கூடிய பேரமைப்பில் இணையுமாறு உங்களைக் கேட்பதற்கு வந்திருக்கிறேன்.
மொரிசியசு நாட்டின் ஆட்சி அதிகாரம் 1810ல் பிரெஞ்சுக்காரர் களிடமிருந்து பிரிட்டிா.அரசுக்கு மாறியது. அதன் பின்னர் இந்தியாவில் தமிழ்நாடு - கேரளா.எல்லைப்புறத்தில் வாழ்ந்த பல்லாயிரம் தமிழ்த் தொழிலாளர்கள் மொரிசியசு தீவுகளில் உள்ள கரும்புத் தோட்டங்களில் வேலை செய்வதற்காக கொத்தடிமைகள் போல் அழைத்துச் செல்லப்பட்டனர். ஏற்கெனவே கல்வி அறிவு குறைவாக இருந்த இந்த மக்கள் தாம் குடியேற்றப்பட்ட தீவுகளில் பணபலமும் சமூக பலமும் அற்று இருந்ததால் தமது தாய்மொழியான தமிழை தமது சந்ததியினருக்கு ஊட்டக்கூடிய வாய்ப்புக்களை இழந்தனர். எனவே கிரியோல் மொழியைப் பேசி, எழுதுகின்ற ஒரு புதிய தமிழ்ச் சந்ததி உருவாயிற்று.
காலப்போக்கில் இந்தப் பாட்டாளி வர்க்கத்திமூலிருந்து தமது கடுமையான உழைப்பின் பயனாகச் சிலர் மத்தியதர வர்க்க நிலையை எட்டிப் பிடித்தனர். தமிழ்ப் பாட்டாளிகள் தமது சனத்தொகைப் பெருக்கத்தால் சமூகப் பயனும் பெற்றனர். ஏற்கெனவே கிரியோல் மொழியைத் தாய்மொழி போல் பேசி வந்தவர்களுக்குத் தமிழைக் கற்றுக் கொடுக்க எடுக்கப்பட்ட அரைகுறை முயற்சிகள் பாடம் சொல்மூலிக் கொடுத்த முறையில் உள்ள குறைகள் காரணமாக வெற்றியளிக்கவில்லை. இதைப் போலல்லாது, சீசெல்சு தீவுகளில் சமீப காலங்களில் சென்று குடியேறிய தமிழ் மக்களே இருப்பதால், அங்கே தமிழ் மொழி கலாச்சாரம், கலைகள் என்பன பாதிக்கப்படவில்லை.
மொரிசியசு தீவுகளில் உள்ள 123 தமிழ்க் கோவில்களில் 108 கோவில்கள் ஒருங்கிணைந்து மொரிசியசு தமிழ் ஆலயங்களின் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கியுள்ளன. மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி வரும் இந்தக் கூட்டமைப்பின் அலுவலகம் மோக்கா.என்ற பிரதேசத்தில் உள்ள சுப்ரமணிய பாரதியார் தெருவில் அமைந்துள்ளது.
இதன் சுறுசுறுப்பான தலைவராக திரு. அம்பிராஜன் நாரசிங்கன் என்ற தமிழர் விளங்குகிறார். இவர் மொரிசியசு பல்கலைக் கழகத்தில் சட்டத்துறைத் தலைவராகப் பதவி வகிக்கிறார். அவரை நான் இருமுறை சந்தித்தேன். நல்ல தமிழ் ஆர்வலரான அவரது மனைவியின் அண்ணன்தான் பல தொழில் நிறுவனங்களின் அதிபராக உள்ள குமரன் செட்டி. இவர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் மொரிசியசு தீவுகளுக்கு உழைப்பதற்காக அழைத்துச் செல்லப்பட்ட பாட்டாளி வர்க்கத்தின் பரம்பரையில் வந்த உழைப்பால் உயர்ந்த தமிழ் வாரிசுகள். இவர்களது உறவினர்கள் பலர் இன்று நல்ல நிலையில் பல்வேறு தொழில்களுக்கு அதிபர்களாக உள்ளார்கள். அத்தோடு தமிழ் மொழியை அதற்குரிய சிறப்பு நிலைக்குக் கொலுவேற்ற ஆர்வத்துடன் உள்ளார்கள்.
ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் குமரன் செட்டி தமிழ்நாடு சென்றபோது நெடுமாறன் ஐயாவைச் சந்தித்து, அவரது பணிகளுடன் தன்னை இணைத்துத் கொள்ள ஆவல் தெரிவித்து தனது முகவரி அட்டையை அவரிடம் கொடுத்திருந்தார். எனது மொரிசியசு - சீசெல்சு பயணத் திட்டத்தை ஐயா.அறிந்தபோது அந்த அட்டையை எனக்குத் தந்ததன் விளைவு தான் எங்கள் மொரிசியசு சந்திப்பு.
இவர்களது கூட்டமைப்பில் உள்ள 108 கோவில்களில் 70 கோவில்களில் பூசை போன்ற சகல கிரியைகளையும் தூய தமிழிலேயே ஆற்றுகிறார்கள். இந்த 70 ஆலயங்களிலும் வழக்கொழிந்த சமா.ருத மொழியின் மூச்சுக் காற்றே வருவதில்லை.
தமிழ்நாட்டிலும், ஈழத்திலும் உள்ள ஆலயங்களில், நூற்றுக்கு நூறு தமிழ் பேசும் பக்தர்கள் வழிபடுகின்ற ஆலயங்களில் உயிர்துறந்த மொழியான சமா.ருதத்தில் ஆராதனை நடைபெறுகிறது. மொரிசியசு நாட்டில் தமிழே புரியாத - கிரியோல் மொழி பேசுகின்ற தமிழ் மக்கள் வழிபடுகின்ற ஆலயங்களில் தூய தமிழில் ஆராதனைகள் நடைபெறுகின்றன!
ஆலய நிர்வாகிகள் தமிழ்நாட்டின் பேருர் ஆதினத்தைச் சேர்ந்த சாந்தமூலிங்க அடிகளாருடன் தொடர்பு கொண்டு தமிழில் ஆலய ஆராதனை அமைய வேண்டும் என்று பெரு முயற்சி எடுத்து உழைத்ததனால் இந்த இலட்சியம் நிறைவேறியது.
மொரிசியசு தமிழினம் தமிழை இழந்துவிட்டது. உலகத் தமிழினம் மொரிசியசு தமிழரை இழந்துவிட்டது. இக்கட்டத்திலும் இழந்த தமிழ் உறவைப் புதுப்பிக்க பல்வேறு முயற்சிகளை இதுவரை எடுத்துக்கொண்ட, தமிழர் நலன் பற்றி பல்வேறு இலட்சியக் கனவுகளை மனதில் கொண்டுள்ள திரு குமரன் செட்டியை உலகத் தமிழர் பேரமைப்பின் மொரிசியசு அமைப்பாளராக வருமாறு வேண்டிக் கொண்டேன். அவரும் ஒத்துக் கொண்டார். குதூகலத்துடன் இலண்டன் திரும்பினேன்.

முந்தைய நிகழ்வுஅடுத்த நிகழ்வு