ஏப்ரல் 2005
தமிழ்த் திரைப்படத்திற்கு ஆங்கிலப் பெயரா.
தடுத்து நிறுத்துவீர் உலகத் தமிழரே
உலகத் தமிழர்களுக்கு பழ. நெடுமாறன் வேண்டுகோள்

உலகில் ஐம்பதிற்கு மேற்பட்ட நாடுகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள். இந்தியாவில் தமிழ்நாட்டிலும் புதுவை மாநிலத்திலும் தமிழர்கள் மிகப் பெரும்பான்மையினராக வாழ்கிறார்கள். இங்கு தமிழர்களின் ஆட்சி நடைபெறுகிறது. கேரளம், கர்நாடகம், ஆந்திரம், மராட்டியம் போன்ற மாநிலங்களில் தமிழர்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் -வாழ்கிறார்கள். சட்டமன்ற உறுப்பினர்களாகவும், அமைச்சர்களாகவும் பதவி வகிக்கின்றனர். இந்தியாவின் பிற மாநிலங்களிலும் கோல்கொத்தா. அகமதாபாத், போபால், டெல்மூ போன்ற பெருநகரங்களிலும் பிழைப்புத் தேடிப் போன தமிழர்களும் கணிசமாக வாழ்கிறார்கள்.
பர்மா. மலேசியா. சிங்கப்பூர், மொரீசியா. தென் ஆப்பிரிக்கா. கயானா. ரீயூனியன், சிசெல்சு, தாய்லாந்து, காம்பூச்சியா. லாவோசு, வியட்நாம், இந்தோனேசியா. பிா.முதமூய பல நாடுகளில் சட்டப்பூர்வமான குடிகளாக, அங்கீகரிக்கப்பட்ட தேசிய சிறுபான்மையினராகத் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
சிங்கப்பூரில் குடியரசுத் தலைவராக ஒரு தமிழர் பதவி வகிக்கிறார். சிங்கப்பூர் அமைச்சர்களாகவும் தமிழர்கள் உள்ளனர். மலேசியா. தென் ஆப்பிரிக்கா. மொரீசியசு, கயானா. சிசெல்சு போன்ற பல நாடுகளில் தமிழர்கள் அமைச்சர்களாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும், அதிகாரிகளாகவும் பதவி வகிக்கின்றனர்.
ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா. கனடா. ஆசுதிரேமூயா. நியூசிலாந்து மற்றும் அரேபிய நாடுகள் ஆகியவற்றில் பரவலாகத் தமிழர்கள் வாழ்கிறார்கள். சீனா. ஜப்பான், பிமூப்பைன்ா.போன்ற நாடுகளில் சிறு எண்ணிக்கையினராகத் தமிழர்கள் வாழ்கின்றனர்.
உலகத் தமிழர் பேரமைப்பும் மற்றும் உலகம் முழுவதிலும் தமிழர் அமைப்புகளும் இணைந்து உலகத் தமிழர் ஒற்றுமைக்காகவும் உலக நாடுகளில் வாழும் தமிழர் பிரச்னைகளுக்குப் பரிகாரம் காண்பதற்காகவும், மொழி, பண்பாடு, கலை, இலக்கியம், வரலாறு ஆகியவற்றை வளர்ப்பதற்காகவும் பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம்.
அதே நேரத்தில் உலக நாடுகளில் பரவியிருக்கும் தமிழர்களின் துன்பங்களிலோ. துயரங்களிலோ.பங்கு கொள்ளாது ஒரு கூட்டம் அவர்களைச் சுரண்டி கொள்ளையடிக்கப் புறப்பட்டிருக்கிறது.
தமிழ் மொழியைப் பேணிவளர்ப்பதோ. தமிழ்ப் பண்பாட்டைச் செழுமையாக்குவதோ.அவர்களின் நோக்கமல்ல.
வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் உழைத்துச் சேகரித்த பணத்தை கொள்ளையடிக்க வணிகச் சூதாடிகள் புறப்பட்டிருக்கிறார்கள்.
இவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கும்படி உலகத் தமிழர்களை வேண்டிக் கொள்ளவே இக்கடிதம் எழுதுகிறேன்.
தொல்காப்பியர் காலத்திமூருந்தே வடமொழியையும், அதன் பண்பாட்டையும் திணித்துத் தமிழைச் சீரழிக்கும் முயற்சிகள் நடைபெற்றே வந்திருக்கின்றன. அதை எதிர்த்துத் தமிழையும், தமிழர் பண்பாட்டையும் காக்கத் தமிழர்கள் தொடர்ந்து போராடி வந்துள்ளனர். இது வரலாறு.
வடமொழி என்னும் ஆயுதம் கொண்டு தமிழை அழிக்க முயன்ற தமிழ்ப் பகைவர்கள் அம்முயற்சியில் தோற்ற பிறகு இப்போது ஆங்கிலம் என்னும் ஆயுதத்தைத் தூக்கி வந்து தமிழை அழிக்க முற்படுகின்றனர்.
பாமர மக்களை ஈர்க்கும் சக்தி வாய்ந்த ஊடகமான திரைப்படங்கள் மூலம் ஆங்கில மோகம் மக்களிடையே திட்டமிட்டுப் பரப்பப்படுகிறது. வெறுக்கத்தக்கக் காட்சிகள், பண்பாட்டுச் சீரழிவை ஏற்படுத்தும் காட்சிகள் வேண்டுமென்றே திட்டமிட்டுப் பரப்பப்படுகின்றன.
தமிழ்திரையுலகில் தமிழர் அல்லாதாரே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் நிதி அளிப்பவர்கள் ஆகியோரில் பெரும்பகுதி தமிழர் அல்லாதாரே. இவர்களுக்குத் தமிழைப் பற்றியோ.நமது பண்பாடு பற்றியோ.கொஞ்சமும் கவலையில்லை. காசு ஒன்றே இவர்களுக்குக் குறி. காசுக்காக எதை வேண்டுமானாலும் இவர்கள் செய்வார்கள். தமிழ்த் திரையுலகம் இவர்களின் பிடியில் கட்டுண்டுக் கிடக்கிறது.
கொலைக் குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கும் காஞ்சி மடத்தலைவரின் கறுப்புப்பணம் பலநூறு கோடி திரையுலகில் புரளுகிறது. அதைப் பயன்படுத்தி திரையுலகில் உள்ள உண்மையான தமிழர்களை ஓரங்கட்ட முயற்சி நடக்கிறது.
"தென்றல்" படத்தின் மூலம் தமிழ்க் குடமுழுக்கு விழாவைக் காட்டிய ஒரே காரணத்திற்காக இயக்குநர் தங்கர்பச்சான் சொல்லமுடியாத அளவுக்கு அவமானங்களுக்கும் புறக்கணிப்பிற்கும் ஆளாகியுள்ளார்.
இளம் இயக்குநர் புகழேந்தி ஈழத்தமிழர் அகதிகள் பிரச்னையை மய்யமாக வைத்து எடுத்த "காற்றுக்கென்ன வேமூ" என்னும் படத்தை திரையிடுவதற்கே அவர் உச்சநீதிமன்றம் வரை சென்று போராட வேண்டியிருந்தது.
தமிழன் என்ற உணர்வோடு உள்ள இயக்குநர்கள் வ.செ.குகநாதன், சீமான், வேலு பிரபாகரன், வெ.சேகர் போன்றவர்களை ஒதுக்கித்தள்ளும் முயற்சி நடைபெறுகிறது.
"இயக்குநர் இமயம்" என்ற பெயர் பெற்ற பாரதிராஜாவைக் கூட தமிழ்ப் பகைவர்கள் விட்டு வைக்கவில்லை.
தமிழ்ப் படங்களுக்கு ஆங்கிலப் பெயர் சூட்டும் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த இரு ஆண்டுகளில் வெளிவந்த 60க்கு அதிகமான படங்களுக்கு ஆங்கிலப்பெயர்களே சூட்டப்பட்டிருந்தன.
இப்போது உருவாகிக் கொண்டிருக்கும் 80க்கு மேற்பட்ட படங்களுக்கு ஆங்கிலத் தலைப்புகளே வைக்கப்பட்டுள்ளன.
தமிழர்கள் பார்க்கும் தமிழ்ப் படங்களுக்கு புரியாத ஆங்கிலப் பெயர் சூட்டுவதன் காரணம் என்ன?
படங்கள் எடுப்பவர்களும், நடிகர்களும் மற்றவர்களும் தமிழ்ப்பகைவர்கள் என்பதையும் தமிழைச் சீரழிக்கவே இவ்வாறு செய்கிறார்கள் என்பதையும் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
உலகம் முழுவதும் தமிழர்கள் பரவி இருப்பதால் தமிழ்ப்படங்கள் உலகச் சந்தைக்கு உரியவை ஆகிவிட்டன. இந்தச் சந்தையை முழுவதுமாகப் பயன்படுத்துபவர்கள் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களேயாவார்கள்.
தமிழ்ப்படம் எடுப்பவர் தனது செலவில் பெரும்பகுதியை அல்லது பாதிக்குக் குறையாமல் உலகச் சந்தையில் தனது படத்தை விற்பதன் மூலம் பெற்று விடுகிறார். எனவே தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் உலகச் சந்தையைக் குறியாக வைத்தே படம் எடுக்கிறார்கள். இவர்கள் பணம் சம்பாதிப்பதைப் பற்றி எதுவும் கூற விரும்பவில்லை. ஆனால் தமிழ்ப் பண்பாட்டுச் சீரழிவை உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்களிடம் இவர்கள் பரப்புகிறார்கள் என்பதுதான் வேதனைக்குரியது.
இந்தத்தீய போக்கை எதிர்த்துப் போராட தமிழ்நாட்டுத் தமிழர்கள் தயாராகி விட்டார்கள். தமிழக மக்கள் மேற்கொண்டிருக்கும் இந்த பண்பாட்டுப் புரட்சி முழுமையான வெற்றிபெற உலகத் தமிழர்கள் உதவ வேண்டும்.
ஆங்கிலத் தலைப்பு சூட்டப்பட்ட தமிழ்ப்படங்களையும், பண்பாட்டுச் சீரழிவு செய்யும் படங்களையும் பார்க்க மாட்டோம் என உலகத் தமிழர்கள் முடிவு செய்தால் இவர்களின் கொட்டம் ஒடுங்கும்.
பல ஆண்டு காலமாக பலகோடி ரூபாய் மீளாத கடனில் மூழ்கித் தவித்த நடிகர் சங்கக் கடனைத் தீர்க்க உதவியவர்கள் மலேசியாத் தமிழர்களே.
அதனால் திரையுலகைச் சேர்ந்த பல சங்கத்தினரும் வெளிநாடுகளில் கலைநிகழ்ச்சி நடத்தி நிதி திரட்டுகின்றனர்.
உலகத் தமிழர்களின் பணத்தைச் சுரண்டுபவர் நமது பண்பாட்டை, மொழியை அழிப்பதைப் பார்த்து நாம் சும்மா.இருக்கலாமா.
நம்மை ஏமாளிகளாக நினைத்துக் கொண்டு நமது தலைகளில் மிளகாய் அரைக்கிறார்கள்.
எனக்கு இதய அறுவை மருத்துவம் நடைபெற்ற போது உலகெலாம் உள்ள தமிழர்கள் எனக்காக வழிபாடுகள் நடத்திய நிகழ்ச்சிகள் இன்னமும் எனது நெஞ்சில் நெகிழ்வை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.
ஆனால் இன்று தமிழன்னையைக் கூறு போட முயலும் போது உலகத் தமிழர்கள் பார்த்துக்கொண்டு சும்மா.இருக்க முடியாது, இருக்கக் கூடாது.
சகோதரர் வைகோ.அவர்களும் நானும் மற்ற தோழர்களும் பொடாச் சட்டத்தின் கீழ்ச் சிறைப்பட்ட போது எங்கள் விடுதலைக்காக உலகத் தமிழர்கள் திரண்டெழுந்து குரல் கொடுத்த காட்சிகள் எனது மனத் திரையில் இன்னமும் விரிந்து கொண்டே உள்ளன.
ஆனால் சிறைப்பட்டுக் கிடக்கும் தமிழ்த்தாயின் கைவிலங்குகளை அகற்ற வேண்டிய கடமை உலகத் தமிழர்களுக்கு உண்டு.
உலகத் தமிழர்களின் அன்பிற்கும் நம்பிக்கைக்கும் உரிய உற்ற தோழன் என்கிற முறையில் உரிமையோடு கேட்கிறேன்.
தமிழ்ப்பண்பாட்டிற்கு எதிரான படங்களையும், ஆங்கிலப் பெயர் சூட்டிய படங்களையும் பார்க்காமல் புறக்கணியுங்கள்.
உலகத் தமிழர்களை ஏமாற்றிச் சுரண்ட நினைக்கும் வணிகச் சூதாடிகளுக்கு நல்ல பாடம் கற்பியுங்கள்.
ஒவ்வொரு தமிழனின் தலையாய கடமை இது. உலகத் தமிழர்கள் அக்கடமையைச் சிறப்பாக செவ்வனே செய்வர் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

முந்தைய நிகழ்வுஅடுத்த நிகழ்வு