சனவரி 2005
உலகத்தமிழர் பேரமைப்பு தலைமையகத் திறப்பு விழா.

சென்னை. டிச.25:- உலகத் தமிழர் பேரமைப்பின் தலைமையகத் திறப்புவிழா.சிறப்பாக நடைபெற்றது.
கோட்டூர் தெற்கு மதகுத் தெருவில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள எழில்மிகு கட்டிடத்தில் நடைபெற்ற இத்திறப்பு விழாவில் உலகத்தமிழர் கொடியைத் திருமதி தாமரைபெருஞ்சித்திரனார் ஏற்றி வைத்தார். பேரமைப்பின் துணைத்தலைவர் முனைவர் தமிழப்பன் அனைவரையும் வரவேற்றார்.
பழ. நெடுமாறன் தலைமையுரை யாற்றினார். ஆா.ரேலியாவைச் சேர்ந்தவரும் உலகத்தமிழர் பேரமைப்பின் செயலாளர் - நாயகமுமான மருத்துவர் பொன். சத்தியநாதன் தலைமையகத்தைத் திறந்து வைத்துச் சிறப்புரையாற்றினார்.
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மாவை. சேனாதிராசா. இலங்கை மலையக மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் சிவலிங்கம், உணர்ச்சிக் கவிஞர் காசி. ஆனந்தன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். புலவர் இறைக்குருவனார் எழுதிய "தமிழ்த் தேசியத் திருநாள்" என்னும் நூலை பேரா. சுப. வீரபாண்டியன் வெளியிட, ஈகி. ப. பெரியசாமி பெற்றுக் கொண்டார்.
இவ்விழாவில் முன்னாள் துணைவேந்தர் ஒளவை. து. நடராசன், முனைவர் நன்னன், கவிஞர் இன்குலாப், புலவர் அறிவுடைநம்பி, திருச்சி செளந்தரராசன், வேம்பையன், த. சுந்தரராசன், கவிக்கொண்டல் மா. செங்குட்டுவன், திரைப்பட இயக்குநர் எா. பி. முத்துராமன், ரவி தமிழ்வாணன், கவிஞர் அறிவுமதி, ஆவடி மனோகரன் உட்பட திரளான தமிழறிஞர்களும் உணர்வாளர்களும் கலந்து கொண்டனர்.
சத்தியமங்கலம் கிருட்டிணசாமி மற்றும் தோழர்கள் பெரியார் மரச் சிற்பம் ஒன்றினைத் தலைமையகத்திற்கு அளித்தனர்.
இறுதியாகத் தலைமையகச் செயலாளர் பத்மநாபன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

உலகத்தமிழருக்கு நிழல் தந்த கொடைவள்ளல்கள்

உலகத் தமிழர் பேரமைப்பின் தலைமையகம் நிறுவுவதற்காகப் புதிய கட்டிடம் ஒன்றினையும் அதற்குத் தேவையான மரச் சாமான்கள், கணினி ஆகியவற்றையும் ஆா.ரேலியா.மருத்துவர் சத்தியநாதன் அவர்களும் அவரது துணைவியார் மருத்துவர் தேவ மேரி நளாயினி அவர்களும் அளித்துள்ளனர்.
கட்டிடமாகவே கட்டித்தந்து பெருங்கொடை வழங்கிய இருவருக்கும் உலகத்தமிழர்கள் சார்பில் பழ. நெடுமாறன் நன்றி தெரிவித்தபோது கூடியிருந்தோர் அனைவரும் பெரும் ஆரவாரம் செய்து வரவேற்றனர்.
உலகத்தமிழர் பேரமைப்பின் துணைத் தலைவரும் இலண்டனைச் சேர்ந்தவருமான மருத்துவர் இந்திரகுமார் தொலைக்காட்சிப் பெட்டி மற்றும் கட்டில், குளிரூட்டும் விசிறி போன்றவற்றை வழங்கியுள்ளார். அவருக் கும் உலகத்தமிழர் நன்றி என்றும் உரியது.

முந்தைய நிகழ்வுஅடுத்த நிகழ்வு