சூலை 2005
உலகத் தமிழர் பேரமைப்பு மாநாடு
வரவேற்புக்குழு அமைப்பு

உலகத் தமிழர் பேரமைப்பின் மூன்றாவது உலகத் தமிழர் மாநாடு சூலை 31 ஞாயிற்றுக்கிழமை முழுநாள் நிகழ்வாக நாகர்கோவிலில் நடைபெற உள்ளது. அதற்கான ஆலோசனைக் கூட்டம் நாகர்கோவில், தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலகர் சங்கம் அரங்கில் நடைபெற்றது.
உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் திரு பழ.நெடுமாறன் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். இந்தியத் தமிழ் அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர் புலவர் அறிவுடைநம்பி, தலைமையகச் செயலாளர் திரு. இரா.பத்மனாபன், திரு.க.பரந்தாமன், எழுத்தாளர் பொன்னீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குமரி மாவட்டத் தமிழ் அமைப்புகள் கூட்டமைப்புத் தலைவர் புலவர் கு.பச்சைமால் வரவேற்றுப் பேசினார்.
திருவாளர்கள் கோ.முத்துக்கருப்பன், பூ.திருமாவேந்தன், சி.பா.ஐயப்பன், கவிஞர் வானம்பாடி, வழக்கறிஞர் இர.சி.தங்கசாமி, வே.தமிழ்மாறன், க.கருணாநிதி ஆகியோர் கருத்துரை வழங்கினர். புலவர் அறிவுடை நம்பி, பொன்னீலன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
மாநாட்டு வரவேற்புக்குழுத் தலைவராகத் தமிழ் ஆலயம் இயக்குநர் புலவர் பச்சைமால் தேர்ந்தெடுக்கப்பட்டார். மற்றும் நிருவாகி களாகவும், உறுப்பினர்களாகவும் கீழ்க்கண்டவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
துணைத் தலைவர்களாக ஏ.பி.எா.ரவீந்திரன், முனைவர் எா.ஏ.ஆர்.பரதராஜ், கவிஞர் சி.பா.ஐயப் பன், ஆதி.நாகநாதன், புலவர் வே.இராம சாமி, நாஞ்சில் வானம்பாடி, கோ.முத்துக் கருப்பன், பேரா.விநாயகம் பெருமாள், வழக்கறிஞர் இரா.சி தங்கசாமி, டாக்டர் மு.ஆல்பென்ா.நதானியேல்
செயலாளராக த.த.ஆதிலிங்கம்
இணைச் செயலாளர்களாக ம.எட்வின் பிரகாஷ், கவிஞர் குமரி ஆதவன், த.இ.தாகூர், புலவர் வே.தமிழ்மாறன், க.கருணாநிதி, டி.தேவதாசு, டாக்டர் கு.சிதம்பர நடராசன், புலவர் பா.லாசர்
உறுப்பினர்களாக பேரா. ச.குமரன், கவிஞர் முத்தண்ணன், சு.செல்வக்குமரன், எம்.முத்துராமன், கோ.சுகுமாறன், அமலதாசு தென்சிங்கு, பா.பிதலிா. பா.பாப்பா. கோபால், சு.முருகேசன், பி.சத்திர பாலகிருஷ்ணன்
ஒருங்கிணைப்பாளராக பூ.திருமாவேந்தன்
கெளரவ ஆலோசகர்களாக பொன் னீலன், புலவர் வே.செல்லம், பி.தியாகராசன், முனைவர் எா.பத்ம நாபன், ப.நா.பெருமாள், சேக்.அப்துல்லா. தமிழாலயன், பொ.காளி யப்பன், மா.பென்னி, கெ.அன்பெழில், பேரா.அய்தர் அலி, பேரா.அ.செகதீசன், பேரா.தியாக அலி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

முந்தைய நிகழ்வுஅடுத்த நிகழ்வு