சூலை 2005
நாகர்கோவில் - சூலை 31
உலகத் தமிழர் மாநாடு
பன்னாட்டுத் தமிழர்கள் பங்கேற்கின்றனர்
தமிழகமெங்கும் பயண ஏற்பாடுகள் தீவிரம்

தொல்காப்பியரும், திருவள்ளு வரும், அதங்கோட்டாசானும், கவிமணியும், செய்குத்தம்பி பாவலரும் பிறந்த குமரி மண்ணில் உலகத் தமிழர்களின் பிரதிநிதிகள் கூடுகிறார்கள். முக்கடல் கூடும் மண்ணில், தமிழகத்தின் தென் முனையில் பலவேறு நாட்டு தமிழர்களும் சங்கமிக்கிறார்கள்.
நாகர்கோவில் நகரில் உலகத் தமிழர் பேரமைப்பின் மூன்றாம் ஆண்டு நிறைவு மாநாடு சூலை 31ஆம் தேதி ஞாயிறு அன்று நடைபெற இருக்கிறது. தமிழறிஞர்கள், கவிஞர்கள், தலைவர்கள் பங்கு பெறுகிறார்கள்.
இந்திய மாநிலங்களில் தமிழர் நிலை பற்றிய கருத்தரங்கில் பல மாநிலத் தமிழர்கள் பங்கு பெறுகிறார்கள்.
அறிவியல் தமிழ் கருத்தரங்கு, தமிழறிஞர் ஆய்வரங்கம் ஆகியவற்றில் தமிழகத்தின் தலைசிறந்த தமிழறிஞர்கள் உரையாற்றுகிறார்கள்.
பாவரங்கத்தில் புகழ்பெற்ற கவிஞர்கள் பலரும் பாடுகிறார்கள்.
உலகத் தமிழர் கருத்தரங்கில் ஆா.ரேலியா. இலங்கை, தென் ஆப்பிரிகா. ஐரோப்பா. அராபிய நாடுகள், மோரிசியசு, சீசேல்சு, ரீயூனியன் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கிறார்கள்.
விழாவின் சிகரமான நிகழ்ச்சியான உலகத் பெருந்தமிழர் விருது வழங்கும் விழா.மாலையில் நடைபெறுகிறது. தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் உலகத் தமிழறிஞர்களின் தலைமணி போன்றவருமான முனைவர் வ.அய்.சுப்பிரமணியம் அவர்களுக்கு இந்த விருது இவ்வாண்டு வழங்கப்படுகிறது.
இறுதியாக வாழ்த்தரங்கில் தமிழகத்தில் பல்வேறு கட்சித் தலைவர்களும், திரைப்படக் கலைஞர்களும் உரையாற்று கிறார்கள்.
விழாவில் பாசறைப்பாணர் தேனிசை செல்லப்பா.குழுவினர் தமிழிசை விருந்து அளிக்கின்றனர்.
புலவர் கு.பச்சைமால் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மாநாட்டு வரவேற்புக் குழுவினர் மாநாட்டினைச் சிறப்பாக நடத்துவதற்குரிய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் திரளான தமிழ் உணர்வாளர்கள் வாகனங்கள் மூலம் மாநாட்டிற்கு வருவதற்கான ஏற்பாடுகளில் முனைந்துள்ளனர்.

முந்தைய நிகழ்வுஅடுத்த நிகழ்வு