சூலை 2005
சூலை-20 உலகத் தமிழர் நாள் கொண்டாடுவீர்
தமிழர் அமைப்புகளுக்கு வேண்டுகோள்

அன்புடையீர்,
வணக்கம். ஆண்டுதோறும் சூலை 20 ஆம் நாளை உலகத்தமிழர் நாளாகக் கொண்டாடும்படி உலகத்தமிழர் பேரமைப்பு விடுத்த வேண்டுகோளை ஏற்று பலநாடுகளிலும் தமிழர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
இந்த ஆண்டும் தங்கள் அமைப்பின் சார்பில் கீழ்கண்ட முறையில் சிறப்பாகக் கொண்டாடும்படி வேண்டிக் கொள்கிறேன்.
1. விழாவில் கலந்து கொள்ளும் அனைவரும் தமிழர் தேசிய உடை அணிந்து வரவேண்டும்.
2. விழாவில் உலகத்தமிழர் கொடி ஏற்ற வேண்டும்.
3. விழாத் தொடக்கத்திலும், நிறைவிலும் உலகத்தமிழர் பண் இசைக்கப்பட வேண்டும்.
4. விழாவில் கவியரங்கம், கருத்தரங்கம், கலை நிகழ்ச்சி ஆகியவை நடத்தப் பெறலாம்.
5. விழா.பற்றிய செய்தியை உடனடியாகத் தலைமை அலுவலகத்திற்குத் தெரிவிக்க வேண்டும்
அன்புள்ள,
பழ. நெடுமாறன்
தலைவர்
குறிப்பு : தமிழர் தேசிய உடை, உலகத் தமிழர் கொடி, உலகத் தமிழர் பண் ஒலிப்பேழை ஆகியவை தலைமை அலுவலகத்தில் விற்பனைக்குக் கிடைக்கும்.

முந்தைய நிகழ்வுஅடுத்த நிகழ்வு