மே 2005
"செஞ்சிலுவைச் சங்கம் முலம் ஈழத்தமிழர்களுக்கு உதவுக"
இலங்கையுடன் பாதுகாப்பு உடன்பாடு கூடாது
உலகத்தமிழர் பேரமைப்பு ஆட்சிக்குழுத் தீர்மானங்கள்

உலகத்தமிழர் பேரமைப்பு ஆட்சிக்குழுக் கூட்டம் சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி மாலை நடைபெற்றது. கூட்டத்திற்குப் பழ.நெடுமாறன் தலைமை தாங்கினார். கூட்டத் தில் துணைத்தலைவர்கள் முனைவர் க.ப.அறவாணன், முனைவர் தமிழப்பன், செயலாளர் நாயகம் மருத்துவர் செ.நெ.தெய்வ நாயகம், தலைமை அலுவலகச் செயலாளர் பத்மநாபன் மற்றும் கவிஞர் காசி ஆனந்தன், சச்சிதா.னந்தன், சுப.வீரபாண்டியன், கு.அரசேந்திரன், தேனிசை செல்லப்பா. வீர சந்தானம், புலவர் அறிவுடைநம்பி, யாதும் ஊரே சொக்கலிங்கம், முகம் மாமணி, பொன்னிறைவன், தீனதயாளன், தமித்தலட்சுமி, இளம்பிறை எம்.ஏ. இரகுமான் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
ஆட்சிக்குழுக் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1. ஆழிப்பேரலை உதவிநிதியில் இருந்து இரண்டு இலட்சம் ரூபாய்களைத் தமிழீழ மக்களுக்கு உதவுவதற்காக அனுப்ப ஆட்சிக் குழு முடிவு செய்கிறது.
2. உலகத் தமிழர் பேரமைப்பின் 3வது ஆண்டு மாநாட்டினை ஆா.ரேலியா.வில் உள்ள தமிழ் அமைப்பு களுடன் இணைந்து நடத்த நமது செயலாளர் - நாயகம் மரு.பொன்.சத்தியநாதன் முன்வந்ததை ஆட்சிக்குழு பாராட்டுகிறது. இது தொடர்பாக அவருடன் தொடர்புகொண்டு ஆவனசெய்வதென்றும், மாற்று ஏற்பாடாக நெல்லை அல்லது நாகர்கோவிலில் நடத்துவது பற்றி அங்குள்ள தமிழ் அமைப்புகளுடன் கலந்து முடிவு செய்வது என்றும் இக்குழு முடிவு செய்கிறது.
3. 2002ஆம் ஆண்டு நடைபெற்ற தொடக்க விழா.மாநாட்டுக் கணக்குகள், 2003ஆம் ஆண்டு புதுச்சேரியில் நடைபெற்ற முதலாம் ஆண்டு நிறைவுவிழா.மாநாட்டுக் கணக்குகள், 2004ஆம் ஆண்டு பெங்களூரில் நடைபெற்ற 2ஆம் ஆண்டு நிறைவு விழா.மாநாட்டுக் கணக்குகள், ஆட்சிக் குழுவின் பரிசீலனைக்கு வைக்கப் பட்டு ஏற்கப்பட்டன.
4. ஆழிப் பேரலையினால் இலங்கையில் ஈழத்தமிழர் வாழும் வட-கிழக்கு மாநிலம் வரலாறு காணாத வகையில் பேரழிவிற்கு உள்ளாயிற்று. 15000க்கு மேற்பட்ட தமிழர்கள் உயிரிழந் தார்கள். மேலும் பல ஆயிரக் கணக்கான மக்கள் எல்லா.வற்றையும் இழந்து ஏதிலிகளாகத் தவிக்கின்றனர். பாதிக்கப்பட்ட தமிழர்களுக்குத் தானும் உதவி செய்யாமலும், உலகநாடு அளித்த உதவி கிடைக்கவிடாமலும் தடுத்து மனித நேயமற்ற முறையில் செயல்படும் சிங்கள அரசை ஆட்சிக் குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
ஐ.நா. செயலாளர் நாயகம் கோபி அன்னான், பிரிட்டிா.இளவரசர் சார்லா. அமெரிக்க முன்னாள் அதிபர் கிளிண்டன் ஆகியோர் ஆழிப்பேரலையினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளைப் பார்வையிட்டு மக்களுக்கு ஆறுதல் கூற வந்தபோது தமிழர் பகுதிகளுக்கு அவர்களைச் செல்ல விடாமல் தடுத்த சிங்கள அரசின் இனவெறிப் போக்கை இக்குழு கண்டிக்கிறது.
அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் போன்ற தொண்டு நிறுவனங்கள் முலம் பாதிக்கப் பட்ட தமிழர்களுக்கு நேரடியாக உதவ உடனடியாக முன்வரு மாறு உலகநாடுகளுக்கு ஆட்சிக் குழு வேண்டுகோள் விடுக்கிறது.
5. இந்தியா.- இலங்கை பாதுகாப்பு உடன்பாடு பற்றிய செய்திகள் இந்திய அரசு தரப்பில் மறுக்கப்பட்டபோதிலும் அதற்கான முயற்சிகள் தொடரு வதாகச் சிங்கள அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையுடன் இந்தியா.பாதுகாப்பு உடன்பாடு செய்து கொள்வது ஈழத்தமிழர்களின் நலனுக்கு எதிரானது மட்டுமன்று இந்தியாவின் நலன்களுக்கும் எதிரானதாகும். கடந்த காலத்தில் இந்திய நலன்களுக்கு எதிராகவே சிங்கள அரசுகள் தொடர்ந்து செயல்பட்டு வந்திருக்கின்றன என்பதை இந்திய அரசு கவனத்தில் கொண்டு இலங்கையுடன் எக் காரணம் கொண்டும் எத்தகைய பாதுகாப்பு உடன்பாடும் செய்யக் கூடாது என ஆட்சிக்குழு வற்புறுத்துகிறது.

முந்தைய நிகழ்வுஅடுத்த நிகழ்வு